குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெனிசுலாவில் வாக்களிப்பதற்காக காத்திருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உத்தியோகப் பற்றற்ற ரீதியில் வெனிசுலாவின் எதிர்க்கட்சிகள் இந்த சர்வஜன வாக்கெடுப்பினை ஏற்பாடு செய்திருந்த நிலையில் இந்த வாக்கெடுப்பில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்று வரும் அரசியல் போராட்டங்களில் இதுவரையில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசியல் சாசனம் தொடர்பில் உத்தியோகபூர்வமான சர்வஜன வாக்கெடுப்பு எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comment