இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

மலையக மக்கள் என்றதும் வீட்டு வேலைக்கு ஆட்கள் எடுக்கலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும்

மலையக மக்கள் என்றதும் வீட்டு வேலைக்கு ஆட்கள்  எடுக்கலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும் எனவும் அதற்கு அனைவரும் கல்வி கற்க வேண்டும் எனவும்  அதனாலேயே மலையக கல்வி அபிவிருத்திக்கு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கபட்டு வருகின்றன என கல்வி இராஜாங்க அமைச்சர்   வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் இணைந்து பெருந்தோட்ட மக்களுக்கும் வீடமைப்புகளை மேற் கொள்ளும் பொருட்டு லிந்துல்ல பம்பரகல்ல தோட்டம் அப்பர்கிரன்லி பிரிவில் 30 வீடுகளை அமைப்பதற்க்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக  கலந்துக் கொண்டு  அங்கு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை   அமைச்சர் தெரிவித்தார்.

பெருந்தோட்ட மக்களின் வறுமைக்கு காரணம் மக்களிடையே கல்வி அறிவு இன்மையே. இன்று கொழும்பு மற்றும் தன வந்தகர்களின் வீடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் என்றதும் மலையகத்தையே நாடுகின்றனர். காரணம் இவர்கள் படிக்கவில்லை வீட்டு வேலைக்கு வருவார்கள் என்பதே.

நாங்கள் நன்கு படித்து இருந்திருந்தால் இந் நிலை ஏற்பட்டு இருக்குமா. அதனால் உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு  அனுப்பி நல்லா படிக்க வையுங்கள். அதற்கான வசதிகள் அனைத்தும் மேற்க் கொள்ளபட்டு வருகின்றோம். தற்போது 13 வருடம் கல்வி கட்டாய கல்வியாக மாற்றபட்டுள்ளது. சாதாரண தரம் சித்தியெய்தாவிட்டாலும் உயர்தரத்தில் தொழில் வாய்ப்புக்கான கல்வியை தொடர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு வரும் போது ஒரு வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers