குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு இரண்டு தலைவர்கள் தேவையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் மஹிந்த ராஜபக்ஸ கட்சியின் தலைவர் மைத்திரிக்கு ஆதரவளிப்பதனையே செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் மக்கள் சிலர் அணிதிரண்டுள்ள போதிலும் அது தேர்தலில் வெற்றியீட்ட போதுமானதாக அமையவில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனேயே இருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment