இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் மழை வேண்டி 1008 இளநீர் வெட்டி அம்மனுக்கு அபிசேகம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில்  மழை  வேண்டி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில்  யாக பூயை ஒன்றும் ஆயிரத்து  எட்டு இளநீர்  கொண்டு கனகாம்பிகை அம்மனுக்கு அபிசேகமும் செய்யப்பட்டது

தொடர்ச்சியாக கிளிநொச்சியில்  கடும் வரட்சி நிலவி வருகிறது. குடிநீர் உள்ளிட்ட  நீர்த் தேவைகளுக்கு  மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிகின்றனா், பல இடங்களில் சிறுபோக நெற்செய்கைகளும்  அழிவடையும் நிலையில் காணப்படுகிறது.

அத்தோடு  கிளிநொச்சியில்  இரணைமடுக் குளத்தை நம்பி மேற்கொள்ளப்பட்ட குறைந்தளவு ஏக்கர்  சிறுபோக  நெற்செய்கையில் கூட  மழை இன்மையால் குளத்தில் இருந்த மிகக்குறைந்த அளவு நீர் மட்டம் கூட  குறைந்து செல்வதனால்   நெற்பயிர்கள்  அழிவடைந்து கொண்டுள்ளது இதனால் மழை வேண்டி இவ்  யாக பூயை ஒன்றும் ஆயிரத்து  எட்டு இளநீர்  வெட்டியும்  கனகாம்பிகை அம்மனுக்கு அபிசேகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.