குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்கு தகுதியானவர்கள் இல்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதனை விடவும் அதற்கு தகுதியானவர்களை தேடிப்பிடிப்பதில் சவால்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவில் 5000 தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்றது எனவும் இந்த தொழில் வாய்ப்பிற்கு தகுதியானவர்கள் என மூன்று பேர் மட்டுமே தெரிவாகியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
80 பேர் நேர்முகத் தேர்விற்கு தெரிவான போதிலும் எழுத்துப் பரீட்சையில் 3 பேர் மட்டுமே தேர்வாகினர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment