விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் 5-வது மிகப்பெரிய சேஸிங் செய்து இலங்கை சாதனைப் படைத்துள்ளது

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான,   டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில், 388 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பாக நிரோஷன் டிக்வெல்ல 81, அசேல குணரட்ன ஆட்டமிழக்காமல் 80, குசல் மென்டிஸ் 66, திமுத் கருணாரத்ன 49 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் கிறேம் கிறீமர் 4 விக்கெட்டுகளையும் ஷோன் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக, அசேல குணரட்ன தெரிவானார்.
இதேவேளை  ஜிம்பாப்வேக்கு எதிரான 391 ஓட்டங்களை  சேஸிங் செய்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் 5-வது மிகப்பெரிய சேஸிங் செய்து இலங்கை சாதனைப் படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.