குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெய்னின் லா வூல்றா ( La Vuelta ) சைக்கிளோட்டப் போட்டியில் இனி வரும் காலங்களில் பெண்கள் கவர்ச்சிப் பொருளாக பயன்படுத்தப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் போட்டியை ஏற்பாடு செய்யும் தரப்பினர் வெற்றியாளர்களை அறிமுகம் செய்யும் இடத்தில் கவர்ச்சியான பெண்களை நிறுத்துவதனை வழமையாகக் கொண்டுள்ளனர். எனினும் இனி வரும் காலங்களில் இவ்வாறான ஓர் அணுகுமுறை பின்பற்றப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றியாளர்களை அறிமுகம் செய்யும் இடத்தில் ஆண் உதவியாளர்கள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களை காட்சிப் பொருளாக பயன்படுத்தி போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு நடத்தப்படுவதாகவும் இது பொருத்தமற்றது எனவும் சமூக ஊடக வலையமைப்புக்களில் வெளியிடப்பட்ட விமர்சனத்தைத் தொடர்ந்து, போட்டி ஏற்பாட்டாளர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
Add Comment