இலங்கை பிரதான செய்திகள்

சுயாதீன ஊடகவியலாளரும், யாழ்.ஊடக அமையத்தின் செயலாளருமான தம்பித்துரை பிரதீபன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்:-

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற கூடாது. மேற்படி கூட்டத்திற்காக ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு வருகைதர கூடாது என கூறி மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நடத்திய பத் திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக சுயாதீன ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம் குற்ற புலனாய்வுதுறை இன்று 2 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது.

கடந்த 5ம் மாதம் 8ம் திகதி யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்திய மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் சந்தர்ப்பத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடத்தப்பட கூடாது. அதில் ஜனாதிபதி கலந்து கொள்ள கூடாது எனவும் அவ்வாறு கலந்து கொண்டால் கறுப்பு கொடி காட்டி எதிர்ப்போம் எனவும் கூறியிருந்தார்.

இந்த கருத்து தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு குறித்தே குற்ற புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தியிருக்கின்றனர். நேற்றைய தினம் காலை 10 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை 2 மணிநேரம் மேற்படி விசாரணை நடத்தப்பட்டிருக்கின்றது. இந்த விசாரணையில் யாழ்.மாவட்ட சுயாதீன ஊடகவியலாளரும், யாழ்.ஊடக அமை யத்தின் செயலாளருமான தம்பித்துரை பிரதீபன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக விசாரிப்பதற்காக கடந்த 10ம் திகதி தம்பித்துரை பிரதீபனை கொழும்புக்கு வருமாறு குற்றபுலனாய்வு துறை அழைப்பு விடுத்திருந்தது. எனினும் குறித்த ஊடகவியலாளர் விபத்தில் சிக்கி நடமாட இயலாத நிலையில் இருந்ததால் 10ம் திகதி விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை.

மேலும் தாம் நடமாட இயலாத நிலையில் இருக்கின்றமை தொடர்பாக குற்றபுலனாய்வு துறையினருக்கு தெரியப்படுத்தியும் இருந்தார். இதனையடுத்து கொழும்பில் இருந்து யாழ். சென்ற குற்ற புலனாய்வு துறையின் குழு ஒன்று யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்த விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. மேலும் இந்த விசாரணைகளில் மேற்படி ஊடகவியலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டு சிங்கள மொழியிலேயே அவரு டைய விளக்கம் எழுதப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap