இலங்கை பிரதான செய்திகள்

யாழ்ப்பாணம் சென்றுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரின் முக்கிய சந்திப்புக்கள் தொடர்கின்றன:-

யாழ்ப்பாணம் சென்றுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்னன் உள்ளிட்ட குழுவினர், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்துள்ளார்.

வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்று வரும் இச் சந்திப்பை தொடர்ந்து யாழ். பொது நூலகத்திற்கு செல்லவுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் அங்கு ஒருதொகுதி நூல்களை கையளிக்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழகத்திற்கும் சென்று யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பிரிவை திறந்து வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்கவுள்ள சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.