இலங்கை

கூட்டு எதிர்க்கட்சியிலிருந்து விலகுவதாக ரொசான் ரணசிங்க அறிவிப்பு


குளோபல் தமிழச் செய்தியாளர்

கூட்டு எதிர்க்கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க அறிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் பொலனறுவை மாவட்ட செயற்பாட்டாளராக ரணசிங்க செயற்பட்டு வந்தார்.

கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் சிலரின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டே தாம் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பல்வேறு தலைவர்களும் தம்மிடம் எதனையும் அறிவிக்காது பொலனறுவை மாவட்ட விடயங்களில் தலையீடு செய்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொலனறுவை மாவட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கும் எந்தவொரு கூட்டத்திற்கோ அல்லது நிகழ்விற்கோ எதிர்வரும் காலங்களில் தாம் பங்கேற்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.