இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மீது இன்னமும் கொடூரமான சித்திரவதை மேற்கொள்ளப்படுகின்றன – ஐ.நா


தேசிய பாதுகாப்புக் காரணங்களை  காரணம் காட்டி இலங்கையில்  தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மீது    இன்னமும் சித்திரவதை  மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள், சீர்திருத்தங்கள், நீதி வழங்குதல் ஆகியவற்றில் இலங்கையின் முன்னேற்றம், மிகவும் மந்தமாகவே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

உண்மையைக் கண்டறியும் நோக்கில் இலங்கை வந்த  மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பென் எம்மர்சனின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால்    வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே, மேற்படி விடங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

பென் எமர்சன் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடான சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்  கீழ் கைதுசெய்யப்படுவோர் மீதான சித்திரவதையானது மோசமான நிலையில் காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

கொடூரமான சித்திரவதை தொடர்பில்,   நேரடியான அனுபவங்களை  தான் கேட்டற்நததாக தொவித்த பென் எமர்சன் தடிகளால் அடித்தல், உடலுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இருத்துதல், மண்ணெண்ணெயில் தோய்க்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்து மூச்சுத்திணற வைத்தல், விரல் நகங்களைப் பிடுங்குதல், விரல் நகங்களுக்குக் கீழ் ஊசிகளைச் செருகுதல், பல்வேறு வகையிலான தண்ணீர்ச் சித்திரவதைகள், பெருவிரல்களில் கட்டிப் பலமணிநேரங்களுக்குத் தொங்கவிடுதல், பிறப்புறுப்புகளை சிதைத்தல் ஆகியவற்றை, இந்தச் சித்திரவதைகள் உள்ளடக்குகின்றன  என தெரிவித்துள்ளர்h.

2016ஆம் ஆண்டின் இறுதியில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் 80 சதவீதமானோர், சித்திரவதை, பௌதீக ரீதியான தவறான நடத்தை ஆகியவற்றைச் சந்தித்ததாகக் கூறுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

சித்திரவதை, இவ்வளவு தூரத்துக்கு அதிர்ச்சிகரமாகக் காணப்படுகின்ற போதிலும், பயன்தரக்கூடிய விசாரணைகள் இல்லாமையைக் காண்பதாக அவர் குறிப்பிட்டார்.

12 சந்தேகநபர்கள், விசாரணை எதுவுமின்றி 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பென் எமர்சன், மேலதிகமாக 70 பேர், 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவுமட தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை, அதிகளவிலான பாதுகாப்புச் சவாலைச் சந்திக்கிறது என்பதனை  ஏற்றுக் கொண்ட அவர், எனினும், சீர்திருத்தம், நீதி, மனித உரிமைகள், ஏறத்தாழ அதே இடத்திலேயே நிற்பதாகக் குறிப்பிட்டார்.

நிலைத்திருக்கும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காகவும், நிலைமாறு கால நீதிக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கும், பாதுகாப்புத் துறையின் அவசரமான சீர்திருத்தத்துக்கும் வழங்கிய சர்வதேச அர்ப்பணிப்புகளை இலங்கை நிறைவேற்ற வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

ஆத்துடன் இது தொடர்பில்   முழுமையான அறிக்கையொன்றை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் சமர்ப்பிப்பார் எனவும் அந்த ஊடக அறிக்கையில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.