குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் இலங்கையில் கண்காணிக்கப்படுவதாக அமெரிக்காவின் பயங்கரவாதம் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்புப் படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாத செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு தரப்பினர் முழு அளவில் வழிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அமெரிக்காவின் பயங்கரவாதம் குறித்த ஆண்டறிக்கையில் ; குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைவார்களா என்பது குறித்தும் படையினர் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment