விளையாட்டு

ரொமானியாவின் முன்னாள் டென்னிஸ் வீரருக்கு எதிராக தடை

 குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
ரொமானியாவின் முன்னாள் முதனிலை டென்னிஸ் வீரர் லீ நாஸ்ரேஸ் ( Ilie Nastase )  க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச டென்னிப் பேரவையினால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் 2021ம் ஆண்டு வரையில் லீ உத்தியோகபூர்வமாக டென்னிஸ் போட்டிகளில் எதனையும் செய்யக் கூடாது என அறிவித்துள்ளது.

பிரபல டென்னிஸ் வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், பிரிட்டனின்  ஜொகானா கொன்ரா ( Johanna Konta   ) ஆகியோருக்கு எதிராக கடுiமாயன விமர்சனங்களை வெளியிட்டதாக லீ  மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போட்டி நடுவரை திட்டியமை, வீராங்கனைகளை தரக்குறைவாக நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் 70 வயதான  லீ பத்தாயிரம் அமெரிக்க டொலர்களை அபராதமாக செலுத்த வேண்டுமெனவும் உத்;தரவிடப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.