குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உரிய பயண ஆவணமின்றி ராமநாதபுரத்தில் இருந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஏர்வாடி பிரதேசத்தில் வைத்து குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பைச் சேர்ந்த 60 வயதான காசீம் பாய் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 27ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்ல உள்ளதனால் அங்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
Add Comment