குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாணவர் கடத்தல் முயற்சி குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் சாகல ரட்நாயக்க காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் அவர் இவ்வாறு கோரியுள்ளார். மருத்துவ பீட மாணவர் ஒருவரை காவல்துறையினர் வெள்ளை வானில் கடத்த முயற்சித்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் சீருடையின்றி இவ்வாறு கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Add Comment