டெல்லியில் தமிழக விவசாயிகள் பாதி மொட்டை அடித்து போராட்டம் நடத்தியுள்ளார்கள். பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் கடந்த 16ம் திகதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்திவருகிற நிலையில் போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது.
இந்தநிலையில் நேற்று விவசாயிகள் பாதி மொட்டை அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தர் பகுதியில் சிறிது தூரம் ஊர்வலமாக சென்ற அவர்கள், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளார்கள்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Add Comment