நீதிபதி மீதான தாக்குதல் சம்பவத்தை திசைதிருப்ப பொலீசார் முயற்சிப்பதாக வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் ,
குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் காட்டும் தீவிரம் எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதி கடந்த காலங்களில் பாரதூரமான வழக்குகளை கையாண்டு வருகின்றார். அதனால் அவர் மீது இலக்கு வைத்தே தாக்குதல் நடாத்தப்பட்டு உள்ளது. ஆனால் போலீசார் தக்குதலாளியின் இலக்கு நீதிபதி இல்லை என கூறுவது , இந்த சம்பவத்தை திசை திருப்பும் முயற்சியாகவே நாம் கருதுகின்றோம்.
அச்சுறுத்தல்களுக்கு அடிபணிபவர் அல்ல நீதிபதி மா.இளஞ்செழியன். ஆனாலும் தாக்குதலாளிகள் விரைந்து கைது செய்யபடவேண்டும். விசாரணைகளை உரிய முறையில் முன்னெடுத்து உண்மையான குற்றவாளியை போலீசார் கைது செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
Spread the love
Add Comment