குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்கள் இந்தியாவில் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 28 கிலோ கிராம் எடையுடைய தங்க பிஸ்கட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. கடல் வழியாக இந்த தங்க பிஸ்கட்கள் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்டுள்ளன. மூன்று வேறுவேறு சந்தர்ப்பங்களில் தங்க பிஸ்கட்கள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளன.
கொயம்பத்தூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த தங்க கடத்தல்களுடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Add Comment