குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமூக ஊடக வலையமைப்புக்களை நெறிப்படுத்த வேண்டிய காலம் மலர்ந்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கமும் சட்டத்துறையினரும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இணையம், முகநூல் போன்றவற்றை கட்டுப்படுத்துவது அடிப்படை உரிமை மீறலாகவே கருதப்படுகின்றது எனத் தெரிவித்த அவர் உலகின் பல நாடுகளில் சமூக மற்றும் சிறுவர் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து இலங்கையிலும் கவனம் செலுத்தபபட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள பிரதமர் நினைத்துப் பார்க்காத புதிய புதிய பிரச்சினைகள் உருவாகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment