இந்தியா பிரதான செய்திகள்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 389 எரிவாயு சிலிண்டர் விபத்துகள் ஏற்பட்டுள்ளது:-

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 389 காஸ் சிலிண்டர் விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 15 பேர் உயிர் இழந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை கொடுங்கையூரில் உள்ள உணவகம் ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியின்போது எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீப்பிளம்பில் சிக்கி தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 8 பேர் உயிர் இழந்ததுடன் 48 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், இதுபோன்று மீண்டும் ஒரு விபத்தில் தீயணைப்பு வீரர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என தீயணைப்பு அதிகாரிகள் முடிவு செய்ததன்படி தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த எரிவாயு சிலிண்டர் விபத்துகள் குறித்து கணக்கெடுக்கப்பட்ட போதே இந்த விபரங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

விரைவில் தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பாக தீயணைப்பது குறித்தும், விபத்தில் சிக்கிக் கொள்ளாமல் பணி செய்வது குறித்தும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாகவும் தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.