இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

கனியவள நிலைய ஊழியர்களின் தொழில் சங்க நடவடிக்கையால் மலையகத்தில் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு:-

கனியவள நிலைய ஊழியர்களின் தொழில் சங்க நடவடிக்கையால் மலையக மக்களின் இயல்பு நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கனியவள நிலைய ஊழியர்கள் நள்ளிரவு முதல் அரசாங்கத்திடம் முன் வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால்; வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மலையத்தில் ஒரு சில கனியவள நிலையங்கள் திறந்துள்ளன. இதில் தங்களுக்கு தேவையான பெற்றோல்¸ டீசல்¸ மண்ணெண்ணெய் போள்றவற்றை பெற்றுக் கொள்வதற்காக பொது மக்கள் வாகனங்களிலும் பாரிய வரிசைகளிலும் நின்று வருகின்றனர். இதனால் பெரும் வாகன நெறிசலும் ஏற்பட்டு உள்ளது. இந் நிலை புஸ்ஸல்லாவ நகரத்திலும் காணக் கூடியதாக இருந்தது.

இன்றைய தினம் காலை வேலையில் தொழில்களுக்கு செல்பவர்கள்¸ ஆசிரியர்கள் உட்பட பலர் பல இன்னல்களுக்கு மத்தியில் தங்கள் கடமைகளுக்காக சென்றனர். பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் பல இன்னல்களை அனுபவித்தனர். மாலை வேலையில் இவர்கள் வீடு திரும்பும் போது மேலும் இன்னல்களை அனுபவி;க்க வேண்டிய நிலை வந்துள்ளது. அதனால் இவர்களின் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வை பெற்றுக் கொடுத்து நிலைமையை வழமைக்கு கொண்டு வருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.