இலங்கை பிரதான செய்திகள்

வெலிக்கடை சிறை படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வெலிக்கடை சிறை படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் நல்லூருக்கு அருகில் இடம்பெற்றது.

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை , ஜெகன் உள்ளிட்ட 53 போராளிகளின் நினைவேந்தல் நிகழ்வு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

நல்லூர் பின் வீதியில் திலீபனின் நினைவு தூபிக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்நிகழ்வில் வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் , மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன் மற்றும் புவனேஸ்வரன் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers