குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்திய இலங்கை உடன்படிக்கையினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டார் என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் தமது தந்தை காமினி திசாநாயக்க அமைச்சராக கடமையாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதனை எதிர்த்தது என குறிப்பிட்டுள்ள அவர் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படாவிட்டால் இந்தியா, இலங்கைக்கு உதவியிருக்காது என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா உதவியிருக்காவிட்டால் இலங்கை பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Add Comment