Home இலங்கை கடத்தப்பட்ட பல இலட்சங்கள் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடத்தப்பட்ட பல இலட்சங்கள் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

by admin

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி பளை  பகுதியில் வைத்து பல இலட்சங்கள் பெறுமதியான மரக்குற்றிகள்  காவல்துறையினரினால்  கைப்பற்றப்பட்டுள்ளன.

மல்லாவி பகுதியில் இருந்து எருவுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் பாரவூர்த்தி ஒன்றில் யாழ்ப்பாணம் நோக்கி கடத்திச் செல்லப்பட்ட நிலையில் கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான விசேட பிரதி காவல்துறைமா அதிபரின்  குற்றத்தடுப்பு பிரிவினா் இவற்றை கைப்பற்றியுள்ளனா்.

காவல்துறையினருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து பளை இத்தாவில் பகுதியில் ஏ9 பிரதான வீதியில் வைத்து குறித்த பாராவூர்த்தியை சோதனையிட்ட போதே முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கோண்டு வருகின்றனா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More