குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் நாட்டுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் வெளிநாட்டு சக்திகளின் கொள்கைகளை அமுல்படுத்தி வருவதாகவும், இதனால் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கமும் பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
Add Comment