இந்தியா

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நோயாளர் காவு வண்டியை வெள்ளம் அடித்து சென்றதில் நால்வர் உயிரிழப்பு


இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக  பெய்து வருகின்ற கனமழை காரணமாக   ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன்  தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளதால்  போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இந்நிலையில்,  குறித்த பகுதியினூடாக சென்று கொண்டிருந்த ஒரு நோயாளர் காவு வண்டியொன்று ஆற்றுப்பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட போது     வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனால், நோயாளர் காவு வண்டியில் இருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.  மீட்பு படையின் மீட்பு பணிளை மேற்கொள்கின்ற போதிலும் இதுவரை    உடல்களை மீட்க முடியவில்லை எனவும்  அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply