குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு சீனா வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே என்ற கொள்கையை இலங்கை தொடர்ந்தும் பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். இறுதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவிற்கு பயணம்; செய்திருந்த போது இந்த விடயம் பற்றிய தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது சீனா உதவிகளை வழங்கியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
Add Comment