இலங்கை

தாஜூடீன் பயணித்த வாகனத்தை பின்தொடர்ந்த வாகனம் குறித்து விசாரணை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் பயணித்த வாகனத்தை பின் தொடர்ந்த வாகனம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு தாஜூடீன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

ஆரம்பத்தில் இந்த சம்பவம் ஓர் விபத்து எனக் கூறப்பட்ட போதிலும் தற்போது இது ஓர் படுகொலைச் சம்பவம் என குற்றம் சுமத்தி விசாரணகைள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் உயிரிழந்த தினத்தில் தாஜூடீனின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற வாகனமொன்று குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply