இந்தியா பிரதான செய்திகள்

இணைப்பு 2- நிதிஷ்குமார் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றார்.

பீகார் சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள நிதிஷ்குமார் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றார்.
பீகார் சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 243  என்ற வகையில்   நிதிஷ்குமார் பெரும்பான்மையை நிரூபிக்க 122  சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற  நம்பிக்கை வாக்கெடுப்பில், நிதிஷ் குமாருக்கு ஆட்சிக்கு ஆதரவாக 131 சட்டமன்ற உறுப்பினர்களும்., எதிராக 108 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனால், பீகார் மாநிலத்தில் முதலமைச்சராக நிதிஷ்குமார் தொடர்ந்து நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், தனது அரசுக்கு இன்று நம்பிக்கை வாக்கு கோரவுள்ளார்:-

Jul 28, 2017 @ 03:29
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், சட்டசபையில் 2 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் நிதிஷ்குமார் இன்று தனது நம்பிக்கை வாக்கு கோருவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கொண்ட கூட்டணி ஆட்சியமைத்து இருந்தது. இந்த கூட்ணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பதவி விலகிய நிதிஷ் குமார் பாஜகவின் துணையோடு மீண்டும் நேற்றையதினம் முதலமைச்சராக பதவியேற்றிருந்தார். இந்தநிலையில் சட்டசபையில் 2 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் பீகார் சட்டசபையின் ஒருநாள் சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் நிதிஷ் குமார், தனது அரசுக்கு நம்பிக்கை வாக்கு கோருவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.