குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தூய்மையற்ற அரசாங்கத்தில் நான் இருக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமக்கு தேவை என்றால் நாளையே புதிய அரசாங்கமொன்றை அமைக்க முடியும் எனவும், எனினும் குப்பையான தூய்மையற்ற அரசாங்கமொன்றை அமைக்கத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தூய்மையற்ற அரசாங்கம் என்பதனாலேயே தாம் கடந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறியதாக தெரிவித்த அவர் தற்போது இருக்கும் அரசாங்கமும் தூய்மையற்றது என்றால் அதிலிருந்தம் வெளியேற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
‘தற்போது இருக்கும் அரசாங்கம் தூய்மையற்றது என்றால் அதிலிருந்தம் வெளியேற முடியும்’, என்று வீம்பு பேசும் ஜனாதிபதிக்கு, மாறாக அவ்வரசாங்கத்தைத் தூய்மைப்படுத்தத் தனது சகல அதிகாரங்களையும் பயன்படுத்த முடியுமென்று கூற முடியவில்லையே? இப்படிக் கைகழுவி விடுவதற்காகவா மக்கள் இவரைத் தமது, ‘சர்வ வல்லமையுள்ள ஜனாதிபதியாகத்'(?) தெரிவு செய்தார்கள்?
ஆட்சியாளர்கள் ஒன்றில் அரக்கர்களாக அல்லது பேடிகளாக இருப்பதும் , நாட்டின் தலைவிதிதான் போலும்?