விளையாட்டு

ரங்கன ஹேரத் உபாதையினால் பாதிப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை  அணியின் தலைவர் ரங்கன ஹேரத் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிராக காலியில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் மாலையில் ஹேரத் உபாதைக்கு உள்ளானார்.

இடது கையின் நடு விரலில் உபாதை ஏற்பட்டுள்ளதாகவும் இது பாரியளவிலான உபாதை கிடையாது எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

இந்த தொடரில் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராக அறிவிக்கப்பட்ட தினேஸ் சந்திமால் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டதனால், ரங்கன ஹேரத் அணித் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார்.  விரேட் கொஹ்லி அடித்த பந்து ஒன்றை தடுக்க முற்பட்ட போது இவ்வாறு ஹேரத் உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply