குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ராஜதந்திர முறுகல் நிலை உக்கிரமடைந்துள்ளதனையடுத்து அமெரிக்கா, ரஸ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ரஸ்யாவிற்கான அமெரிக்கத் தூதரகப் பணியாளர்களின் எண்ணிக்கையை வரையறுக்குமாறு ரஸ்யா அறிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கான ரஸ்ய தூதரகத்தின் அதிகாரிகள் எண்ணிக்கைக்கு நிகரான ரஸ்யாவிற்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்து ரஸ்யா அமெரிக்கத் தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை 455 ஆக மட்டுப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க ராஜதந்திரிகள் பயன்படுத்தி வரும் சொத்துக்களையும் முடக்குவதற்கு ரஸ்யா தீர்மானித்துள்ளது.
Spread the love
Add Comment