உலகம் பிரதான செய்திகள்

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த குட்டிக் குழந்தை சார்லி கார்ட் மரணம்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த குட்டிக் குழந்தை சார்லி கார்ட் மரணித்துவிட்டதாக பெற்றோர் அறிவித்துள்ளனர்.

பிரித்தானியா மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் சார்லிக்காக பிரார்த்தனையும் வேண்டுதல்களும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிகிச்சை முறைமை தொடர்பில் கடுமையாக பல நீதிமன்றங்களில் போராடிய பெற்றோர் இறுதியில் தங்களது போராட்டத்தை கைவிட்டிருந்தனர். 11 மாத சிசுவான சார்லி கார்ட்டின் உயிர் பிரிந்து விட்டதாக அவரது பெற்றோர்களான Connie Yates  மற்றும் Chris Gard   உருக்கமாக தெரிவித்துள்ளனர்.  Great Ormond Street  மருத்துவ மனையுடன் மிக நீண்ட அடிப்படையிலான ஓர் சட்டப் போராட்டமொன்றை கார்ட் தம்பதியினர் நடத்தியிருந்தனர்.

மாவட்ட நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் என பல்வேறு மட்டங்களில் தமது பிள்ளைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ மனை அனுமதிக்க வேண்டுமென கோரி போராடியிருந்தனர். இந்தப் போராட்டத்திற்கு பரிசுத்த பாப்பாண்டவர், அமெரிக்கா ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களும் ஆதரவளி;த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மரபணு மாற்றத்தினால் பிறவியிலேயே ஏற்படக்கூடிய மூளை மற்றும் தசை தொடர்பான ஓர் விசித்திரமான நோயினால் சார்லி பாதிக்கப்பட்டிருந்தார். அவரை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டுமென பெற்றோர் போராடியிருந்தனர். எனினும், சிகிச்சை அளிப்பதற்கான காலம் கடந்து விட்டதாக அமெரிக்க நரம்பியல் நிபுணர் பேராசிரியர் Michio Hirano  தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து சார்ளியின் பெற்றோர் தமது முயற்சியை கைவிட்டிருந்தனர். பிரித்தானிய பிரதமர் திரேசா, பரிசுத்த பாப்பாண்டவர், அமெரிக்க துணை ஜனாதிபதி உள்ளிட்ட பலரும் சார்லியின் மறைவிற்கு இரங்கல் வெளியிட்டுள்ளனர். தங்களது மகனை நினைத்து பெருமிதம் கொள்வதாகவும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் கார்ட் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் அநேக பத்திரிகைககளின் முதல் பக்கங்களின் சார்லியின் புகைப்படம் தாங்கிய செய்திகளே பிரசுரிக்கப்பட்டுள்ளன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.