குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நெவில் பெர்னாண்டோ போதான வைத்தியசாலையின் நிர்வாக சபைக்கு புகையிலை உற்பத்தி நிறுவனமொன்றின் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும், குறித்த நபர் கணக்காய்வாளராகவும், பிரதமரின் ஆலோசகராகவும் கடமையாற்றி வருகின்றார் என சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சங்கத்தினர் பிரதமருடன் சந்திப்பு நடத்திய போதும் அதன் இணைப்புப் பணிகளை இந்த நபரே மேற்கொண்டிருந்தார் எனவும் தமக்கு உதவிய நபர் ஒருவரை இவ்வாறு விமர்சனம் செய்வது பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment