இந்தியா பிரதான செய்திகள்

கதிராமங்கலத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 5 பேர் மருத்துவ துவமனையில் அனுமதி:-

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 5 பேர் உடல் நலக் குறைவால் நேற்று மாலை மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும், கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முன்தினம் 5 பேர் அய்யனார்கோவில் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

நேற்று காலை இவர்களுக்கு உடல் சோர்வு ஏற்பட்டதை அடுத்து நேற்று மாலை 5 பேரும் அம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.