இலங்கை

டுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

டுபாயில் கொள்ளையில் ஈடுபட்டதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாய் பாதுகாப்பு நிறுவனமொன்றில் கடமையாற்றி வரும் இலங்கையர்கள் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

11 லட்சத்து 98 ஆயிரம்  தினார்களை இவர்கள்  கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டுபாய் வர்த்தக நிலையமொன்றின் பல கிளைகளது பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 6ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரையில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொள்ளையிட்ட பணத்தை அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தனர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.