இலங்கை பிரதான செய்திகள்

ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கை ஊடாக மேற்குலக நாடுகளுக்கு ஹெரோயின் கடத்தப்படுகின்றது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கை ஊடாக மேற்குலக நாடுகளுக்கு ஹெரோயின் போதைப் பொருள் கடத்தப்படுகின்றதென இந்திய அதிகாரிகள்   தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் ஹெரோயின் போதைப் பொருள் இலங்கை வழியாக மேற்குலக நாடுகளுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படுவதாக அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு ஹெரோயின் போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும் மாதாந்தம் 2000 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருளுக்கு கேள்வி இருப்பதாகவும்  அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை குஜராத்தில் வர்த்தக கப்பல் ஒன்றிலிருந்து 1500 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  கரையோரப் பாதுகாப்புப் படையினரும், புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இந்த போதைப் பொருட்களை மீட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers