உலகம் பிரதான செய்திகள்

சோமாலியாவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 39 அவுஸ்திரேலிய ராணுவத்தினர் பலி

சோமாலியாவில் அமைதிப்படையைச் சேர்ந்த அவுஸ்திரேலிய ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  சோமாலியாவில் அல் கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவுடன் இயங்கும் அல் ஷபாப் தீவிரவாதிகளுக்கெதிராக சோமாலியா ராணுவத்துடன் இணைந்து ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்றையதினம்  அல்ஷபாப் தீவிரவாதிகள் அவுஸ்திரேலிய ராணுவ வீரர்கள்  சென்று கொண்டிருந்த  வானங்கள் மீது தீவிரவாதிகள் தாக்கியதாகவும் அதில் 39 அவுஸ்திரேலிய ராணுவ வீரர்கள்  உயிரிழந்துள்ளனர் எனவும் அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் உடல்கள் தம்மிடம் இருப்பதாகவும்   அல்ஷபாப் தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் அப்டியாசிஸ் அபு முசாப் தெரிவித்துள்ளார்.

எனினும்   இதனை மறுத்துள்ள அவுஸ்திரேலிய ராணுவம இரு தரப்புக்கும் இடையே சண்டை நடந்ததாக கூறியுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.