நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவம் திட்டமிட்ட சம்பவம் இல்லை. என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் யாழ்.தலைமை பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தி இருந்தார். அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமில்லை. குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை அதீதிகளின் பாதுகாப்புக்கு வழங்கபப்ட்டு உள்ள மெய் பாதுகாவலர்களின் உடல் தகுதி பயிற்சிகள் என்பன தொடர்பில் மீளாய்வு செய்யபப்டும். என தெரிவித்தார்.
Spread the love
Add Comment