குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய கவனம் செலுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் கூட்டு எதிர்க்கட்சியினர் குழப்பம் விளைவித்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ காட்சிகளை சபாநாயகர் நேற்றைய தினம் பார்வையிட்டுள்ளார்.
ஒரு கமராவில் பதிவான காட்சிகள் மட்டும் கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய கமராக்களில் பதிவான காட்சிகளும் விரைவில் கண்காணிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Add Comment