உலகம் பிரதான செய்திகள்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு அமெரிக்க நிர்வாகம் தடை:-

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு அமெரிக்க நிர்வாகம் தடை விதித்துள்ளதுடன் அவர் ஒரு சர்வாதிகாரி எனவும் அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது.

வெனிசுலாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதற்காக நிக்கோலஸ் மதுரோ முடிவு செய்திருந்த நிலையில், இதற்கான அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் பாராளுமன்றத்தை கலைக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்தன. மேலும் தேர்தலுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றதுடன் சில இடங்களில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டன.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் வேட்பாளர் ஒருவர் உள்பட 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த வன்முறைக்கு மத்தியிலும் தேர்தல் நடைபெற்நு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருப்பதாக ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ நேற்று அறிவித்தார். கடந்த 18 ஆண்டுகால வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய புரட்சி என தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசினார்.

இந்நிலையிலேயே அமெரிக்கா அவர் மீது இவ்வாறு தடை விதித்துள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply