உலகம் பிரதான செய்திகள்

செப்டம்பர் முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக பிரிட்டிஸ் காஸ் (British Gas) அறிவித்துள்ளது.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

செப்டம்பர் மாதம் முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக பிரிட்டிஸ் காஸ்  (British Gas) ) அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் 15 ம் திகதி முதல் மின்சார கட்டணத்தை உயர்த்தவுள்ளதாகவும்  மின்சார கட்டணம் 12.5 வீதத்தினால் உயரும் என பிரிட்டிஸ் காஸ் உரிமையாரான சென்ரிகா நிறுவனம்  தெரிவித்துள்ளது

.
.பரிமாற்றம் மற்றும் விநியோக செலவுகள் காரணமாகவும் அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாகவும் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக சென்டிரிகா அறிவித்துள்ளது
2013 நவம்பரிற்கு பின்னர் முதல்தடவையாக மின்கட்டணத்தை அதிகரிப்பதாகவும் சென்டிரிகா தெரிவித்துள்ளது.

அதேவேளை ; மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ள வாடிக்கையாளர்களை பாதுகாக்கப்போவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் தனது கொள்கைகளே மின்கட்டண அதிகரிப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்படுவதை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.