குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைககான ரஸ்ய தூதுவர் அலெக்ஸாண்டர் ஏ.கார்சாவா (Alexander A. Karchava) வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெற்றுள்ளதாக ரஸ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என ரஸ்ய தூதுவர் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, ரஸ்யாவை எப்போதும் இலங்கை நட்பு நாடாகவே கருதுகின்றது எனவும் ரஸ்யாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் ஆதரவு வரவேற்கப்பட வேண்டியது எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment