குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்ய தலைநகர் மொஸ்கோ நீதிமன்றில் தப்பிச் செல்ல முயற்சித்த மூன்று சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிகளைப் பறித்து தப்பிச் செல்ல முயற்சித்த சந்தேக நபர்களே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு சந்தேக நபர்களும் மூன்று பாதுகாப்புப் படை உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளனர். வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றிற்கு லிப்ட் மூலம் செல்லும் போது பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கி தப்பித்துச் செல்ல குறித்த சந்தேக நபர்கள் முயற்சித்துள்ளனர்.
ஜீ.ரீ.ஏ எனப்படும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கும்பல் ஒன்றின் உறுப்பினர்களே இவ்வாறு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் 17 சாரதிகளை கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment