குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மின்சாரத்தை துண்டிக்கும் திட்டமில்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டில் கடுமையான வரட்சி நிலவிய போதிலும் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கவில்லை எனவும், இடையறாது மின்சாரம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின் தடையை அமுல்படுத்தவோ அல்லது கட்டணத்தை உயர்த்தவோ அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 300 மெகாவோட் உற்பத்தி செய்யும் ஓர் பிரிவு இயங்கவில்லை எனவும், நீர் மின் உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment