குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போலிப் பயணச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த இலங்கையரை கைது செய்துள்ளனர். நுவான் பெர்னாண்டோ என்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கு இடமான முறையில் விமான நிலையத்தில் உலவித் திரிந்த போது குறித்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கொழும்பிலிருந்து இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்த தாயை பார்ப்பதற்காக தாம் வந்திருப்பதாக குறித்த நபர் அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார். ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டை பயன்படுத்தியதாக குறித்த இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Add Comment