இலங்கை

யா/புனித ஹென்றியரசர் கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யா/புனித ஹென்றியரசர் கல்லூரியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் கத்தோலிக்க  சம்பிரதாயபூர்வ  நிகழ்வானது நேற்று (02/08/2017) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இந்தியத் துணைத்தூதரக அதிகாரி ஏ.நடராஜன்   கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் ஆர். ரவீந்திரன் , எஸ். தேவமனோகரன் (வலிகாம வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர், திட்டமிடல் ) , திரு. எஸ். சிவானந்தராஜா (கோட்டக் கல்வி அதிகாரி , சண்டலிப்பாய்) ,  இளவாலை மறைக்கோட்ட முதல்வர் மற்றும் இளவாலையின் பங்குத்தந்தை அருட்பணி எம். யேசுரட்ணம் , அருட்பணி யே. ஏ .யேசுதாஸ் (யாஃபுனித ஹென்றியரசர் கல்லூரியின் முன்னாள் அதிபர் ) , அருட்பணி ஏ. அகஸ்டீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.