விளையாட்டு

எப்போதும் உலகின் அதிவேக மனிதன் தான்தான் – ஹூசெய்ன் போல்ட்


தனது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாதென உலகின் மிகச் சிறந்த குறூந்தூர ஓட்ட வீரரான  ஹூசெய்ன் போல்ட் தெரிவித்துள்ளார்.

இப்போதும் உலகின் அதிவேக மனிதன் தான்தான் எனவும் அதில்  எவ்வித  சந்தேகமும் இல்லை எனவும் தெரிவித்த ஒலிம்பிக் மற்றும் உலக சம்பியனான ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் தனது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்  தனது குழந்தைகள் 20 வயதை எட்டும் போதும் தான்தான்  இப்போதும்   உலகின் சிறந்த ஓட்டப்பந்தய வீரர் என அவர்களிடம் பெருமையோடு கூற விரும்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊக்கமருந்து பயன்படுத்துவோரை எந்த காரணம் கொண்டும் போட்டிகளில் அனுமதிக்கக்கூடாது எனவும்  இல்லாவிட்டால் விளையாட்டே அழிந்து போய் விடும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்றவரான   உசேன் போல்ட்  லண்டனில் நாளை ஆரம்பமாகவுள்ள  உலக தடகள போட்டியுடன் அவர் ஓய்வு பெற உள்ளார்

இந்தப் போட்டியில் வெற்றியீட்டி அந்த வெற்றிக் களிப்பில் ஓய்வு பெற்றுக் கொள்ள விரும்புவதாக 30 வயதான போல்ட் தெரிவித்துள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap