இலங்கை பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண பட்டதாரிகளை உள்ளீர்க்கும் வயதெல்லையை 45 ஆக மாற்றப்பட்டுள்ளது

கிழக்கு மாகாண பட்டதாரிகளை உள்ளீர்க்கும் வயதெல்லையை  45 ஆக மாற்றப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித    பொகொல்லாகம ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து இந்த வாரத்துக்குள் அதற்கான தீர்வு முன்வைக்கப்படும்  தெரிவிக்கப்பட்டிருந்த  நிலையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது,

 
இதனடிப்படையில்  தற்போது  கிழக்கு மாகாண சபையினால்  ஆசிரியர்வெற்றிடங்களை நிரப்ப கோரப்பட்டிருக்கும்   வெற்றிடங்களுக்கு 45 வயதான பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது,

வடக்கு மற்றும் கிழக்கில்  இடம்பெற்ற யுத்தம்  காரணமாக  பலர்    குறிப்பிட்ட  வயதுக் காலப்பகுதியில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்வதில் பல்வேறு  தடங்கல்களை எதிர்நோக்கியிருந்த   நிலையில்  நியமன வயதுப்  பிரச்சினை குறித்து  பட்டதாரிகள் முதலமைச்சரிடம்  முறையிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண பட்டதாரிகளின் நியமன  வயதெல்லை  45 ஆக உயர்த்தக் கூடிய சாத்தியம்
Aug 3, 2017 @ 08:22
கிழக்கு மாகாண பட்டதாரிகளின் நியமன  வயதெல்லையை  45 ஆக உயர்த்துவதற்கு கிழக்கு மாகாண முதமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆளுனருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வுகள் எட்டப்படுவதற்கான சாத்தியங்கள் கிட்டியுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்டையில் நாளைய தினத்திற்குள் இது தொடர்பான ஒரு சாதகமான பதிலை குறித்த பட்டதாரிகளுக்கு வழங்கக் கூடியதாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பதாக   ஹாபிஸ் நசீர் அஹமட்  தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும்  ஆளுனர் ரோஹித பொகொல்லாகம ஆகியோர் நடத்திய  பேச்சுவார்த்தையின் பின்னரே இந்த விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவிய போர்க்கால சூழ்நிலைகளின் போது தமது பட்டப்படிப்பை தொடர்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டமையினால் வடக்கு கிழக்கில் உள்ள பல பட்டதாரிகள் தமது உரிய வயதில் நிறைவு செய்வதில் பட்டப்படிப்பை நிறைவு செய்வதில் சிக்கல்களை எதிர் கொண்டமை போன்ற பல காரணங்களை முதலமைச்சர் இதன் போது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எடுத்துரைத்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.