இலங்கை

தற்போதைய அரசாங்கத்திலும் கள்வர்கள் இருக்கின்றார்கள் – பைசர் முஸ்தபா


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தற்போதைய அரசாங்கத்திலும் கள்வர்கள் இருக்கின்றார்கள் என உள்ளுராட்சி  மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் சைபர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் அது குறித்து விசாரணைகளே நடத்தப்பட்டு வருவதாகவும் எனவே இந்த விடயம் குறித்து இப்போதே கருத்து வெளியிட   முடியாது எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் பொதுவாக எல்லா அரசாங்கங்களிலும் இந்த அரசாங்கத்திலும் கள்வர்கள் இருப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கள்வர்களை தண்டிக்கும் கடமையை நீதிமன்றங்கள் மேற்கொள்ளும் என அவர் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply